நியூசிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கேப்டனாக தொடரும் ஹர்மன்பிரீத்!

Updated: Thu, Oct 17 2024 21:32 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

அதேசமயம் இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியானது 4 லீக் போட்டிகளில் இரண்டு வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதிலும் குறிப்பாக தங்களது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியுடன்ம் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடமும் என இந்திய அணி தோல்வியைத் தழுவியதன் கரணமாக லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனையடுத்து இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்மன்பிரீத் கவுர் மீதான வீமர்சனங்களும் அதிகரித்ததுடன், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்நிலையில் இந்திய மகளிர் அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது அக்.24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

மேற்கொண்டு இத்தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை ஹர்மன்பீரித் கவுர் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு இந்த அணியின் துணைக்கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக ஆஷா சோபனா, பூஜா வஸ்திரேகர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி தேர்வு காரணமாக ரிச்சா கோஷும் இத்தொடரில் இடம்பிடிக்க வில்லை. இதன் காரணமாக அறிமுக வீராங்கனைகள் தேஜல் ஹசாப்னிஸ், சைமா தாகூர், பிரியா மிஸ்ரா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா, உமா செத்ரி, சயாலி சத்கரே, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தேஜல் ஹசாப்னிஸ், சைமா தாக்கூர், பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்.

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா - நியூசிலாந்து தொடர் அட்டவணை

  • அக்டோபர் 24 - முதல் ஒருநாள் போட்டி - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
  • அக்டோபர் 27 - இரண்டாவது ஒருநாள் போட்டி - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
  • அக்டோபர் 29 - மூன்றாவது ஒருநாள் போட்டி - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை