போதுவான இடத்தில் நடத்தப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்; ஐசிசி அதிரடி அறிவிப்பு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியை பகிஸ்தான் செல்ல அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலில் ஹைபிரிட் மாடலில் இத்தொடரை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆனால் அதன்பின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புகொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதே முறையை இந்தியாவில் நடத்த்ப்படும் தொடரிலும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்ததாக கூறப்பட்டது.
அதன்ப்டி எதிர்வரும் 2031ஆம் ஆண்டு வரை இந்தியாவில் விளையாடும் ஐசிசி தொடர்களையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயாய ஐசிசி தொடர் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 2027ஆம் ஆண்டுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் நடைமுறை படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து 2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் போட்டிகள் பொதுவான இடத்திற்கும் மாற்றப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் 2028 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளதாகவும், அத்தொடரிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை இறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.