மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Tue, Dec 24 2024 12:05 IST
Image Source: Google

சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடாரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் யு19 அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் யு19 அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து மகளிருக்கான ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. 

அதன்படி, நடப்பு யு19 மகளிர் உலகக்கோப்பை தொடரானது ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 02ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் தலா 4 அணிகள் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்திய மகளிர் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நிலையில், அதில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளனர். 

இதில் இந்திய அணியின் குரூப் போட்டிகள் கோலாலம்பூரில் உள்ள பயாமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஜனவரி 19ம் தேதி எதிர்கொள்கிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நிக்கி பிரசாத் அணியின் கேப்டனாக தொடரும் நிலையில், அணியின் துணை கேப்டனாக சானிகா சால்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் அணியின் விக்கெட் கீப்பர்களாக கமலினி மற்றும் பவிகா அஹிர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மகளிர் யு19 ஆசியக் கோப்பையை வென்ற அணியைச் சேர்ந்த வைஷ்ணவி எஸ் பிரதான அணியில் இடம் பிடித்துள்ள நிலையில், நந்தனா எஸ் ரிசர்வ் வீராங்கனைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த முறை நடைபெற்ற மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் ஷஃபலி வர்மா தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டைத்தை வென்றுள்ளது.

அதன் காரணமாக இம்முறையும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். மேலும் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் ஆசியக் கோப்பையை நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வென்றது. அதன் காரணமாக இந்திய மகளிர் அணி இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

மகளிர் யு19 இந்திய அணி: நிக்கி பிரசாத் (கேப்டன்), சானிகா சால்கே, ஜி த்ரிஷா, கமலினி ஜி, பவிகா அஹிர், ஈஸ்வரி அவாஸ்ரே, மிதிலா வினோத், ஜோஷிதா விஜே, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா, கேஸ்ரி த்ரிதி, ஆயுஷி சுக்லா, ஆனந்திதா கிஷோர், எம்.டி.ஷப்னம், வைஷ்ணவி எஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை