ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா; அட்டவணை வெளியீடு!

Updated: Fri, Jul 08 2022 22:51 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டு எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை.

அப்போது நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து தொடருக்கு முன்பு நடைபெற்ற அயர்லாந்து தொடரும் முன்பே நடத்த திட்டமிடப்பட்டது தான். கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியும் தற்போது நிறைவேறியது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர் வரும் 17ஆம் தேதி நிறைவடைகிறது.

இதன் பின்னர் ஐந்தே நாள் இடைவெளியில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் தொரில் பங்கேற்கிறது.ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் போட்டிக்கு இதற்காக தான் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு 5 டி20 தொடர் நடைபெறுகிறது. இது ஆகஸ்ட் 7ஆம் தேதி முடிவடைகிறது.

இதற்கு முன் அறிவிக்கப்பட்ட அட்டவணையில் இந்திய அணிக்கு 20 நாட்கள் இடைவெளி இருந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 20 நாள் இடைவெளியில் தான் இந்திய அணி , ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதியும், 2ஆவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், 3ஆவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதியும் ஜிம்பாப்வேவில் நடைபெறுகிறது. இந்த தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. இது முடிந்த 5 நாட்களில் ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதால், ஜிம்பாப்வே தொடரில் முற்றிலும் வேறு அணியை பிசிசிஐ களமிறக்கலாம்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11ஆம் தேதி ஆசிய கோப்பை முடிவடைந்த நிலையில், அந்த ஒரு வாரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு அங்கு 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. அதன் பின்னர், டி20 உலகக் கோப்பை அக்டோபர் மாதம் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை