Zim vs ind
ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடாத ருதுராக் கெய்க்வாட் ஒரு இடம் பின் தங்கி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய ஷுப்மன் கில் 36 இடங்கள் முன்னேறியதுடன் தரவரிசையில் 37ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
Related Cricket News on Zim vs ind
-
பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது - சஞ்சு சாம்சன்!
இளம் வீரர்கள் வந்து என்னிடம் கேட்கும் விதத்தில் நான் நடந்துகொள்வது மிகவும் முக்கியம். எனவே இது ஒரு சகோதர உறவு போன்றது என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா!
நாங்கள் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அதுவே நாங்கள் இந்த தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ...
-
இது எங்களுக்கு ஒரு சிறப்பான தொடராக அமைந்துள்ளது - ஷுப்மன் கில்!
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு நாங்கள் சிறப்பாக செயல்பட்டது பார்ப்பதற்கே அலாதியாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் விளாசிய 110 மீட்டர் இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விளாசிய 110 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ZIM vs IND, 5th T20I: சஞ்சு சாம்சன், முகேஷ் குமார் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ZIM vs IND, 5th T20I: சஞ்சு சாம்சன் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IND: இமாலய சிக்ஸருடன் புதிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை விளாசிய 7ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இப்போட்டியின் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது - சிக்கந்தர் ரஸா!
இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ...
-
எனது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இப்போட்டியை இறுதிவரை களத்தில் இருந்து முடித்து கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்த முதல் ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை அந்த அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா படைத்துள்ளார். ...
-
ZIM vs IND, 4th T20I: அரைசதத்தை தவறவிட்ட ரஸா; இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24