சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது - ஹர்பஜன் சிங்!

Updated: Thu, Jul 25 2024 23:14 IST
Image Source: Google

வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.  

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.

இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி இந்த ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த விரும்பும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஆனால் பிசிசிஐ இந்திய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் படி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும்? பாகிஸ்தானில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளும் சம்பவங்கள் நடக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அங்கு செல்வது இந்திய அணிக்கு பாதுகாப்பானது என்று நான் நினைக்கவில்லை. பிசிசிஐயின் நிலைப்பாடு முற்றிலும் சரியானது, நமது வீரர்களின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவுமில்லை. பிசிசிஐயின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்” என்று தெரீவித்துள்ளார். ஏற்கெனவே இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா செல்லாதா என்ற கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில் ஹர்பஜன் சிங்கின் இக்கருத்தானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை