உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறிய இலங்கை அணி!

Updated: Mon, Sep 23 2024 21:00 IST
Image Source: Google

நியூசிலாந்து அணியானது இலங்கையுல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலேவில் உள்ள கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் இலங்கை அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கலேவில் உள்ள கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 71.67 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று புள்ளிகள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் முதலிடத்தை தக்கவைத்தது. 

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய இலங்கை அணியானது 50 புள்ளிகளைப் பெற்று தற்போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணியானது 42.86 புள்ளிக்களுடன் 4ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இங்கிலாந்து அணி 42.19 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும், வங்கதேச அணி 39.29 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 38.89 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 19.05 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை