டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு அதிக வாய்ப்புண்டு - ஷாஹித் அஃப்ரிடி!

Updated: Sun, Jul 10 2022 18:48 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இந்திய அணி ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் அபாரமாக விளையாடிக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவான அணிகளே.

எனவே ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை வெல்ல பெரிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.

இங்கிலாந்தில் நடந்துவரும் அந்த அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி 50 ரன்கள் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.

இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருப்பது மட்டுமல்லாது, பவுலிங் பேட்டிங்கை விட வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். பும்ரா டெத் ஓவர்களில் அசத்துபவர். ஹர்ஷல் படேல் நல்ல வேரியேஷனை கொண்டவர். ஷமி அருமையான பவுலர். இவர்கள் தவிர அதிவேகமாக வீசக்கூடிய உம்ரான் மாலிக், இளம் அர்ஷ்தீப் சிங் என பவுலிங் யூனிட் மிக வலுவாக உள்ளது.

இந்திய அணியின் இந்த வலுவான பவுலிங் யூனிட்டை மீறி எதிரணியால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அந்தவகையில், இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் அபாரமாக விளையாடிவரும் நிலையில், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று ஷாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஷாஹித் அஃப்ரிடி, “இந்திய அணி அபாரமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்ல தகுதியான அணி இந்தியா. உண்மையாகவே அருமையான பவுலிங் பெர்ஃபாமன்ஸ். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பையை கண்டிப்பாகவே இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை