WI vs IND, 4th T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

Updated: Sun, Aug 07 2022 00:35 IST
Image Source: Google

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா-ரிஷப் பண்ட் ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். 

ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் ஹூடா 21, தினேஷ் கார்த்திக் 6, சஞ்சு சாம்சன் 30 நாட் அவுட், அக்சர் பட்டேல் 20 ரன்கள்  சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளைக் எடுத்தனர். 

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 13, கைல் மேயர்ஸ் 14, டேவன் தாமஸ் 1, கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பாவல் தலா 24 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். 

இதனால் 19.1 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அவேஷ் கான், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி சாதித்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை