வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது ஆட்ட அணுகுமுறையை மாற்றி விளையாட தவறியதால் விக்கெட்டை விரைவாக பறிகொடுத்தனர்.
முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் இருக்கும் வங்கதேச அணி சொந்த மண்ணில் கடைசியாக 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது போல் இந்த முறையும் வென்று சாதிக்க வேண்டும் என்று எல்லா வகையிலும் முயற்சிக்கும்.
இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சின் வேகம் மற்றும் பவுன்ஸ் நிலையற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச லெவன்
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல்/ஷாபாஸ் அகமது, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், குல்தீப் சென்
வங்கதேசம் - லிட்டன் தாஸ் (கே), அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், எபாடோட் ஹொசைன்.