வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Dec 21 2022 22:34 IST
India vs Bangladesh, 2nd Test – IND vs BAN Cricket Match Preview, Prediction, Where To Watch, Probab (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியது.

இந்நிலையில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs இந்தியா
  • இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
  • நேரம் - காலை 9 மணி

போட்டி முன்னோட்டம்

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின்  கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை . இதனால் அவர் இரண்டாது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் கேஎல் ராகுலே 2ஆவது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார்.

இந்நிலையில் அவரும் பயிற்சியின் போது காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இப்போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் ஷுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அவர்களுடன் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருடன் இப்போட்டியில் ஜெய்தேவ் உனாத்கட்டும் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேசமயம் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதனை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர், ஷாகில் அல் ஹசன் இப்போட்டியில் நிச்சயம விளையாடுவார் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் அந்த அணியின் அறிமுக வீரர் ஸகிர் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கும் பெரும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அவருடன் நஜ்முல் ஹொசைன், மஹ்முதுல் ஹசன் , மோமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹிம் ஆகியோரும் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரும் இருப்பது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்பட்டாலு, பேட்டிங்கில் செயல்பட்டால் மட்டுமே அந்த் அணியால் இப்போட்டியில் வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 12
  • இந்தியா - 10
  • வங்கதேசம் - 0
  • முடிவில்லை - 2

உத்தேச லெவன்

இந்தியா – ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கே)/ அபிமன்யு ஈஸ்வரன், சட்டெஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேசம் - ஸாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்பிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, தஸ்கின் அகமது.

உத்தேச லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் – விராட் கோலி, சட்டேஷ்வர் புஜாரா, ஸாகிர் ஹசன், ஷ்ரேயாஸ் ஐயர்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், மெஹிதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - தைஜுல் இஸ்லாம், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை