இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Nov 01 2022 20:09 IST
India vs Bangladesh, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable XI (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் சூப்பர் 12 சுற்றின் நாளைய லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதனாத்தில் நடைபெறவுள்ளது.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் 4 புள்ளிகளை பெற்று 2ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த அணி அடுத்து வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுவிட்டால், நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

அதேபோல் வங்கதேச அணியும் 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த அணியும் நாளை இந்தியாவுக்கு எதிராக, அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுவிட்டால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இதனால், நாளைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குரூப் பி பிரிவில் மற்றொரு அரையிறுதி இடத்தை தென் ஆப்பிரிக்க அணி கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது.

இந்திய அணி கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக படுமோசமாக பீல்டிங் செய்து, வெற்றிவாய்ப்பை இழந்தது. வங்கதேச அணியில் ஷாகிப், அஃபிஃப், நஹ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகிய சிறந்த பேட்டர்களும், முஷ்தபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், மொசடெக் ஹொசைன், உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் இருப்பதால், நாளைய போட்டியிலும் பீல்டிங்கில் சொதப்பினால், தோற்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால், பீல்டிங்கில் பட்டையை கிளப்பியே ஆக வேண்டும்.

இந்திய அணியில், தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ரோஹித் சர்மாவும் அவ்வபோது மட்டுமே அதிக நேரம் களத்தில் இருக்கிறார். இப்படி ஓபனர்கள் பலமில்லாமல் இருப்பது அணிக்கு பெரிய பிரச்சினைதான். குறிப்பாக, வங்கதேச அணியில் தொடக்க பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது 1,3 ஆகிய ஓவர்களில் அடிக்கடி விக்கெட்களை வீழ்த்தும் வழக்கத்தை கொண்டிருப்பதால், இது இந்திய தொடக்க வீரர்களுக்கு நிச்சயம் பெரிய பிரச்சினைதான். இதனால் ரோஹித், ராகுல் இருவரும் அழுத்தங்களுடன் விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மற்றபடி மிடில் வரிசை உலகத்தரத்தில் இருக்கிறது. வேகத்திற்கு சாதகமான பிட்ச்களில் அர்ஷ்தீப் சிங்,, ஹார்திக் பாண்டியா ஆகியோர் மிரட்டலாக செயல்படுவதால், வங்கதேச அணி பேட்டர்கள் நாளை ரன்களை குவிக்க திணறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
  • இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 11
  • இந்தியா - 10
  • வங்கதேசம் - 01

உத்தேச அணி

இந்தியா: ரோஹித் சர்மா(கே), கேஎல்ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா/அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கே), அஃபிஃப் ஹொசைன், யாஷிர் அலி, நூருல் ஹசன், மொசாடெக் ஹொசைன், முஸ்தாபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - நூருல் ஹசன்
  • பேட்டர்ஸ் – விராட் கோலி, நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல்
  • ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ஷாகிப் அல் ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், தஸ்கின் அகமது, முகமது ஷமி

*This fantasy XI is based on the understanding, analysis, knowledge, and instinct of the writer. While making your prediction, consider the points mentioned, and make your own decision.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை