ENG vs IND: ரத்தான டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும்- ஐசிசி
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து 5ஆவது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5ஆவது டெஸ்ட் ரத்தானது.
இந்நிலையில் அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. ரத்தான 5ஆவது டெஸ்ட் ஜூலை 1, 2022 அன்று எக்பாஸ்டனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த முடிவுக்கு பிசிசிஐ, இசிபி ஆகிய இரு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 7-ல் தொடங்கி ஜுலை 10 அன்று நிறைவுபெறுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 12-ல் தொடங்கி ஜூலை 17 அன்று நிறைவுபெறுகிறது.