இந்தியா vs நியூசிலாந்து, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Jan 20 2023 21:30 IST
India vs New Zealand, 2nd ODI – IND vs NZ Cricket Match Preview, Prediction, Where To Watch, Probabl (Image Source: Google)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - சயீத் வீர் நாரயண் சிங் மைதானம், ராய்ப்பூர்
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக உள்ளது. முதல் ஆட்டத்தில் சுப்மன்கில் இரட்டை சதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார். விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய அணி பந்து வீச்சில் முகமது சிராஜ் நல்ல நிலையில் உள்ளார். முகமது சமி, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.

முதல் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் பின்னர் ரன்களை வாரி கொடுத்து விட்டனர். இதனால் பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலென், கான்வே, மிட்செல், பிலிப்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் ஃபெர்குசன், சாண்ட்னர், டிக்னர் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பிரேஸ் வெல், முதல் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை நொறுங்கி 57 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கி வந்தது.

மேலும் பிரேஸ்வெல் பந்துவீச்சலும் சமீபகாலமாக அசத்தி வருகிறார். தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 114
  • இந்தியா - 56
  • நியூசிலாந்து -50
  • டிரா - 01
  • முடிவில்லை - 07

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர்/உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கே), க்ளென் பிலிப்ஸ்/இஷ் சோதி, மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி ஃபர்குசன், பிளேர் டிக்னர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - டாம் லாதம்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, டெவான் கான்வே, சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல்
  • பந்துவீச்சாளர்கள் – குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்/இஷ் சோதி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை