இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Jan 28 2023 21:59 IST
India vs New Zealand, 2nd T20I – IND vs NZ Cricket Match Preview, Prediction, Where To Watch, Probab (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை லக்னோவிலுள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - எக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0  என்ற கணக்கில் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி 21 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. 

ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கியுள்ளது. தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா இத்தொடரை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி ஆகியோர் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பங்களிப்பு பெரும் பலமாக உள்ளது. பந்துவீச்சில் இந்திய அணி முதல் போட்டியில் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் நாளைய போட்டியில் பிரித்வி ஷா, முகேஷ் குமார் ஆகியோருக்கு இந்திய பிளெயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதில் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே, ஃபின் ஆலன் ஆகியோருடன் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் லோக்கி ஃபர்குசன், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. மேலும் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • இந்தியா - 10
  • நியூசிலாந்து - 10
  • முடிவில்லை - 03

உத்தேச லெவன்

இந்தியா – இஷான் கிஷன், ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்/ முகேஷ் குமார்.

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் (கே), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன், பிளேர் டிக்னர்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் – டெவான் கான்வே, சூர்யகுமார் யாதவ், ஃபின் ஆலன், ராகுல் திரிபாதி
  • ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள் - லோக்கி ஃபெர்குசன், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை