IND vs NZ, 2nd T20I: தொடரில் நீடிக்குமா இந்திய அணி?

Updated: Sun, Jan 29 2023 11:07 IST
India vs New Zealand, 2nd T20I – IND vs NZ Cricket Match Preview, Prediction, Where To Watch, Probab (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. 

இரு அணிகள் இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் ராஞ்சியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. சுழலுக்கு சாதகமாக மாறிய ராஞ்சி ஆடுகளத்தில் 177 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் உள்ள பலவீனங்கள் வெளிப்பட்டன. உம்ரன் மாலிக் ஒரே ஓவரில் 16 ரன்களை வழங்கிய நிலையில் அர்ஷ்தீப் சிங் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 27 ரன்களை தாரைவார்த்தார். இதுவே பேட்டிங்கில் இந்திய அணிக்கு அதிக அழுத்தத்தை உருவாக்கியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

பேட்டிங்கில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடாஆகியோர் தங்களது இடத்தை அணியில் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமானால் சிறந்த திறனைவெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதில் இஷான் கிஷன் கடைசியாக விளையாடிய 7 இன் னிங்ஸ்களில் (ஒருநாள் போட்டி, டி 20) ஒருமுறை கூட 40 ரன்களை எட்டவில்லை. இரு முறை மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டிருந்தார்.

தீபக் ஹூடா கடைசியாக விளையாடிய 13 இன்னிங்ஸ்களில் சராசரி 17.88-ஐ மட்டுமே கொண்டுள்ளார். ராஞ்சி போட்டியில் 7ஆவது இடத்தில் களமிறங்கிய தீபக் ஹூடா10 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். சுழற்பந்து வீச்சாளர்களே வீசிக் கொண்டிருந்தநிலையில் அவர், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவில்லை.

ராஞ்சி போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட் கைப்பற்றியதுடன் பேட்டிங்கில் 28 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் டி 20 கிரிக்கெட் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

அதேசமயம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதில் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே, ஃபின் ஆலன் ஆகியோருடன் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் லோக்கி ஃபர்குசன், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. மேலும் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

உத்தேச லெவன்

இந்தியா – இஷான் கிஷன், ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்/ முகேஷ் குமார்.

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் (கே), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன், பிளேர் டிக்னர்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் – டெவான் கான்வே, சூர்யகுமார் யாதவ், ஃபின் ஆலன், ராகுல் திரிபாதி
  • ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள் - லோக்கி ஃபெர்குசன், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை