IND vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Nov 20 2021 13:25 IST
India vs New Zealand, 3rd T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, முதலிரு டி20 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது. அதிலும் பேட்ஸ்மேன்களில் ரோஹித், ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 

பந்துவீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அசத்தி வருவதால் நிச்சயம் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதேசமயம் டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாஜ விளையாடினாலும், இறுதி கட்டத்தில் போட்டியை நழுவவிட்டது. 

அணியின் மார்ட்டின் கப்தில், மார்க் சாப்மேன் இணை அபாரமாக விளையாடினாலும், பந்துவீச்சில் நியூசிலாந்து பெரிதாக சோபிக்கவில்லை. 

நாளைய போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால்  ஒயிட் வாஷ் ஆகும் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 19
  • இந்தியா வெற்றி - 10
  • நியூசிலாந்து வெற்றி - 9

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி(கே), ஆடம் மில்னே, லோக்கி ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - கிளென் பிலீப்ஸ், ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல்
  • ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் சாண்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், டிம் சௌதி, டிரென்ட் போல்ட், ஹர்ஷல் படேல்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை