இந்தியா vs நியூசிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Jan 31 2023 18:43 IST
India vs New Zealand, 3rd T20I – IND vs NZ Cricket Match Preview, Prediction, Where To Watch, Probab (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடக்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அகமதாபாத்
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரருக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்ட ஷுப்மன் கில்லின் டி20 ஸ்டிரைக் ரேட் எப்போதுமே கேள்விக்குறியாக இருந்துவந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடும் கில், டி20 கிரிக்கெட்டில் அந்தளவிற்கு சோபிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து, நல்ல ஃபார்மில் அபாரமாக விளையாடிவரும் ஷுப்மன் கில்லை புறக்கணிக்க முடியாது என்பதால் டி20 தொடரிலும் அவர் களமிறக்கப்பட்டார்.

ஆனால் முதலிரண்டு போட்டிகளிலுமே ஷுப்மன் கில் சோபிக்கவில்லை.  அதேவேளையில், அதிரடியாக ஆடக்கூடிய மிகத்திறமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா பென்ச்சில் இருக்கிறார். முதல் போட்டியிலேயே அவரை ஆடவைக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எனவே ஷுப்மன் கில்லுக்கு பதிலாக இந்த போட்டியில் பிரித்வி ஷா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி பேட்டிங்கில் கான்வே, பின் ஆலென், மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ஃபெர்குசன், டிக்னர், ஜேக்கப் டபி, சோதி, கேப்டன் சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் பேட்டிங், பந்து வீச்சில் அசத்த கூடியவர்.

நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • இந்தியா - 11
  • நியூசிலாந்து -10
  • முடிவில்லை -03

உத்தேச அணி

இந்தியா - ஷுப்மான் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கே), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன், பிளேர் டிக்னர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே
  • பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், ஃபின் ஆலன், ராகுல் திரிபாதி
  • ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல்
  • பந்துவீச்சாளர்கள் - ஜேக்கப் டஃபி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை