உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Jun 17 2021 13:17 IST
India vs New Zealand, WTC Final – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

ரசிகர்களில் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நாளை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலுள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தண்டாயுதமும், 11 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்படவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் : ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானம், சவுத்தாம்ப்டன்
  • நேரம் : மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்தியா

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அபார சாதனையை படைத்து வருகிறது. மேலும் சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வலிமையான நிலையில் உள்ளது.

மேலும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரஹானே, ரிஷப் பந்த் உள்ளிட்டோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் இளம் வீரர் சுப்மன் கில் இப்போட்டியில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்த ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. மேலும் அஸ்வின் - ஜடேஜா இணை மீண்டும் இணைந்து விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

பந்துவீச்சில் பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகியோரது ஃபார்ம் எதிரணிக்கு தலைவலியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என ரசிகர்கள் நம்புகின்றன.

நியூசிலாந்து 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, சமீபத்தில் தான் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய உற்சாகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. 

மேலும் நியூசிலாந்து அணியின் புதிய நட்சத்திரமாக டேவன் கான்வே உருவடுத்துள்ளது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லேதம் என அனுபவ வீரர்களை கொண்டுள்ள நியூசிலாந்து அணி நிச்சயம் இந்திய அணிக்கு சவாலளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பந்துவீச்சில் டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட், நெய்ல் வாக்னர் ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சற்று நெருக்கடியை உருவாக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 

அதேசமயம் நியூசிலாந்து அணி ஏற்கெனவே இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் இறுதி போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. அதனால் இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. 

நேருக்கு நேர்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 21 முறையும், நியூசிலாந்து அணி 12 முறையும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 26 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷாமி / முகமது சிராஜ்.

நியூசிலாந்து - டாம் லாதம், டேவன் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பி.ஜே.வாட்லிங், காலின் டி கிராண்ட்ஹோம், நீல் வாக்னர், டிம் சௌதி, அஜாஸ் படேல், ட்ரெண்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷாப் பந்த், பிஜே வாட்லிங்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, டெவன் கான்வே, கேன் வில்லியம்சன்
  • ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா
  • பந்து வீச்சாளர்கள் - முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, கைல் ஜேமீசன், ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை