தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே களமிறக்கியது ஏன் - ராகுல் டிராவிட் விளக்கம்!

Updated: Wed, Oct 05 2022 09:40 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரீலே ரூஸோவின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 227 ரன்களைக் குவித்தது. அதன்பின் இலக்கை துரத்திய இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 

எப்போதுமே தினேஷ் கார்த்திக் கடைசி சில பந்துகள் இருக்கும்போதுதான் களமிறக்கப்படுவார். 12-13ஆவது ஓவர்களில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவருக்கு அடுத்து இருக்கும் பேட்டர்கள்தான் களமிறங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 4ஆவது இடத்தில் களமிறக்கப்பட்டார். அதுவும் 1.5ஆவது ஓவரிலேயே களத்திற்குள் வந்துவிட்டார்.

பெரிய ஸ்கோர் போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பினிஷிங் ரோல்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, இப்போட்டி முடிந்தப் பிறகு ராகுல் டிராவிட் விளக்கினார். 

அதில், ‘‘தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு சரியான பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன. 6ஆவது இடத்தில் களமிறங்கினால் 5-10 பந்துகள்தான் விளையாட கிடைக்கும். இதனால், எப்போதுமே அழுத்தங்களுடன் விளையாட வேண்டிய நிலைதான் இருக்கும். அந்த நிலையை மாற்றத்தான் இன்று துவக்கத்திலேயே இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தோம். 

இதன்மூலம், அவர்களுக்கு களத்தில் அதிக நேரம் இருக்க நேரம் கிடைக்கும், மன உறுதியும் நன்றாக இருக்கும் என நினைத்தோம். தினேஷ் கார்த்திக் வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்’’ எனக் கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை