ஒரே ஓவரில் 5 பவுண்டரி; காட்டடி அடித்த ருதுராஜ் - காணொளி!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
துவக்க முதலே ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டத் துவங்கினார். அதிலும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசிய ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.
தொடர்ந்து பந்துகளை நான்கு புறமும் சிதறடித்த ருத்துராஜ் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிஷனும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். இதன் காரணமாக 10 ஓவர்களில் இந்திய அணி குவித்தது. கேசவ் மகாராஜ் வீசிய 10வது ஓவர் இறுதி பந்தில் ருத்துராஜ் அவரிடமே கேட்ச் கொடுத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.