இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Oct 29 2022 23:22 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8ஆவது டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 12 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், நாளை பெர்த் மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா – தென்ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி, 4 புள்ளிகளுடன் குரூப்-2இல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வரிசை சோதிக்கப்பட்ட நிலையில், மிடில்-ஆடர் அதிகம் சோதிக்கப்படவில்லை. 

தொடக்க ஆட்டத்தில் அக்சர் படேல் களமாடியது, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து என சிறிய சோதனை ஓட்டமே நடந்துள்ளது. பாகிஸ்தானை வீழ்த்த உதவிய அஸ்வின் இனி வரும் போட்டிகளிலும் அப்படியே செயல்படுவாரா? இந்திய அணியின் லோ-ஆடரில் உள்ள வீரர்கள் அணியின் வெற்றிக்கு கை கொடுப்பார்களாக? என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன. எனினும், இனி வரும் போட்டிகளில் அவற்றை இந்திய அணி சரி செய்தால், அணி கோப்பையை வெல்லும் என்பதில் ஐயமில்லை.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் குயிண்டன் டி காக், ரைலீ ரூஸோவ், டேவிட் மில்லர் ஆகியோர் டாப் ஃபார்மில் உள்ளனர். டி காக் அபாரமாக ஆடிவருகிறார். ரைலீ ரூசோ வங்கதேசத்துக்கு எதிராக அருமையான சதமடித்திருக்கிறார். டேவிட் மில்லர், மார்க்ரம் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தமட்டில் நோர்க்யா 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி மிரட்டுகிறார். ரபாடா, இங்கிடி, வைன் பார்னெல் ஆகியோரும் அபாரமாக பந்துவீசுகின்றனர். ஸ்பின்னர்கள் ஷம்ஸி மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் மிக அபாரமாக பந்துவீசி அசத்திவருகின்றனர். எனவே இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜே, ரபாடா ஆகியோர் 145 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர்கள் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - பெர்த் கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • இந்தியா - 13
  • தென் ஆப்பிரிக்கா - 09
  • முடிவில்லை - 01

உத்தேச அணி

இந்தியா – கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, ரிலீ ரோசோவ், சூர்யகுமார் யாதவ், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வெய்ன் பார்னெல்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நார்ட்ஜே, அர்ஷ்தீப் சிங், தப்ரைஸ் ஷம்சி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை