IND vs SL, 1st Test: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 4ஆம் தேதி மொஹாலியில் துவங்கவுள்ளது. அடுத்து இரண்டாவது போட்டி மார்ச் 12ஆம் தேதி பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக தொடங்கி நடைபெறும்.
இந்த முதல் டெஸ்ட் போட்டி கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு வருடங்களாகச் சதம் அடிக்காமல் இருந்து வரும் இவர், இந்த 100ஆவது டெஸ்டில் சதமடித்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இலங்கை அணியில் அனுபவமில்லா பந்துவீச்சாளர்கள் அதிகம் இருப்பதால், அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
மேலும், கோலி டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் கேப்டனாக இது முதல் போட்டியாகும். இந்தியா கடந்த இரண்டு டெஸ்ட்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், இப்போட்டியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்து, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் இருக்கிறார்.
இதனால், தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்து களமிறங்க ரோஹித், ராகுல் திராவிட் இருவரும் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
இந்திய உத்தேச அணி: ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர்/சுப்மன் கில், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி/முகமது சிராஜ்.