வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்ததாக விளையாடும் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடியேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதில் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் நவி மும்பையிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் பரோடாவிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜனவரி 10ஆம் தேதி தொடங்கும் நிலையில், இதில் அனைத்து போட்டிகளும் ராஜ்கோட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்
- 15-டிசம்பர் - 7:00 PM - முதல் டி20 - நவி மும்பை
- 17-டிசம்பர் - 7:00 PM - 2வது டி20 - நவி மும்பை
- 19-டிசம்பர் - 7:00 PM - 3வது டி20 - நவி மும்பை
- 22-டிசம்பர்- 1:30 PM - முதல் ஒருநாள் - பரோடா
- 24-டிசம்பர் - 1:30 PM - 2ஆவது ஒருநாள் - பரோடா
- 27-டிசம்பர் - 9:30 AM - 3ஆவது ஒருநாள் - பரோடா
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா - அயர்லாந்து தொடர்
- 10-ஜனவரி - 11:00 AM - முதல் ஒருநாள் - ராஜ்கோட்
- 12-ஜனவரி - 11:00 AM - 2ஆவது ஒருநாள் - ராஜ்கோட்
- 15-ஜனவரி - 11:00 AM - 3ஆவது ஒருநாள் - ராஜ்கோட்