அடுத்த 10-15 வருடம் இந்திய அணிக்கு இந்த ஒரு கவலை இல்லை - பிரெட் லீ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியில் பும்ரா, ஷமி ஆகியோரது ஓய்வுக்கு பிறகு அடுத்த 10 -15 ஆண்டுகளுக்கு வேகப்பந்து வீசாளர்களுக்கு குறைவு இருக்காது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியில் சில அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன், திறமைவாய்ந்த இளம் வீரர்களும் உள்ளனர். அதனால் அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பும்ரா, ஷமி ஆகியோர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அடுத்த 10 -15 வருடத்திற்கு தேவையான இளம் வீரர்கள் இந்திய அணியில் விளையாட தயாராகவுள்ளனர். இந்த அளவிலான வீரர்கள் இருப்பதன் காரணமாகவே இந்திய அணியால் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வர முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.