IND vs NZ: ஸ்லோ ஓவர் ரேட்; இந்திய அணிக்கு அபாரம்!

Updated: Fri, Jan 20 2023 17:52 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி கண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதன்பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 337 ரன்கள் வரை விரட்டிவிட்டதால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

இந்நிலையில் அடுத்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் சூழலில் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர். அதாவது முதல் போட்டியின் போது ஐசிசி கொடுக்கப்பட்ட நேரத்தை விட, பந்துவீசுவதற்கு இந்தியா அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீத தொகையை அபராதமாக விதித்துள்ளனர்.

ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு கடைசி ஓவரை வீசியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நேரம் தாண்டி வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% தொகை அபராதமாக பிடிக்கப்படும். அதன்படி பார்த்தால், இந்திய அணி முதல் போட்டியில் 3 ஓவர்களை வீசியதால் மொத்தமாக 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கேப்டன் ரோஹித் சர்மாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை ராய்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயன் சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருபுறம் வெற்றி பாதையை தொடர இந்திய அணியும், மறுபுறம் பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் முணைப்பு காட்டி வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை 2ஆவது போட்டிகாக பேட்டிங்கில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது எனத்தெரிகிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் மிடில் ஆர்டரில் நல்ல அனுபவம் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. பவுலிங்கை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்கூர் மட்டும் நீக்கப்பட்டு, உம்ரான் மாலிக் மீண்டும் அணிக்குள் வருவார் எனத்தெரிகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::