ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் பாபர் ஆசாம்!

Updated: Wed, Aug 10 2022 17:25 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில், டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.

அதன்படி, டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 818 புள்ளிகளுடன் டி 20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதல் இடத்தில் நீடிக்கிறார். 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பேஸ்ட்மேன் வரிசையில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானின் முகம்து ரிஸ்வானும், நான்காவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஐடன் மார்க்ரமும், ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மாலும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் இப்பட்டியலின் டாப் 10 இடத்தில் இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இஷான் கிஷன் 15ஆவது இடத்திலும், ரோஹித் சர்மா 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

டி20 போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெசல்வுட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி 2ஆவது இடத்திலும், ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் 3ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ரஷித் 4ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா 5ஆவது இடத்திலும் உள்ளனர்.

டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் 267 புள்ளிகளுடன் ஆஃப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ஸ்வெல் 4ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ரோஹன் முஸ்தபா 5ஆவது இடத்திலும் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை