தேர்வு குழுவினருடன் விவாதித்து முடிவெடுப்போம் - விராட் கோலி!

Updated: Mon, Dec 06 2021 15:54 IST
Indian Selectors Face 'Problem Of Plenty' After Series Win Against NZ (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. 

ஆனாலும் இந்திய வீரர்களான ரஹானே, புஜாரா சமீபகாலமாகச் சரியாக விளையாடாததால் இருவரையும் அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, “ரஹானே நன்றாக விளையாடுகிறாரா இல்லையா என நான் முடிவெடுக்க முடியாது. கடினமான சூழலிலும் முக்கியமான ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டியது முக்கியம். அழுத்தம் காரணமாக, அடுத்தது என்ன என வீரர் கவலைப்படும்படியான நிலைமையை அணியில் கொண்டு வர மாட்டோம். 

வெளியில் உள்ள சூழலைக் கொண்டு எந்த வீரரைப் பற்றியும் முடிவெடுக்க மாட்டோம். தேர்வுக்குழுவினருடன் முக்கியமான விவாதம் செய்யப்போகிறோம். இது ஆரோக்கியமான தலைவலி தான். இதுபோன்ற விஷயங்களில் தெளிவு வருவது நல்லது. 

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு முன்பு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பது நல்லது. தங்கும் விடுதிக்குச் சென்ற பிறகு உடனடியாக விவாதிக்கவுள்ளோம். நடுவரிசை வீரர்கள் பற்றிய விவாவதம் நடத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட இடங்களுக்கு உகந்த பிரத்யேக பேட்டர்கள் யார் யார் எனப் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை