விண்டீஸ் பேட்டர்களை வீழ்த்தி சாதனைப் பட்டியளில் இணைந்த இந்திய வீரர்கள்!

Updated: Mon, Aug 08 2022 12:59 IST
Indian spinners script history, bag all ten wickets for the first time in a T20I match (Image Source: Google)

லாடர்ஹில்லில் நேற்று நடைபெற்ற 5ஆவது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். ஹார்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும் தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தார்கள். 

இதியடுத்து கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக்க ஷிம்ரான் ஹெட்மையர் 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய வெற்றியின் மூலம் இந்திய அணிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியில் அக்‌ஷர் படேல் ஆட்ட நாயகனாகவும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள். 

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டர்களின் அனைத்து விக்கெட்டுகளும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுபோல எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்துவது இதுவே முதல்முறை. இதன்மூலம் பிஷ்னாய், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்கள். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை