அடுத்த வாரத்தில் வெளியாகும் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி - தகவல்!

Updated: Wed, Sep 01 2021 17:40 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன்படி டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டும் உள்ளன. 

இதற்கிடையில் நடப்பாண்டு டி20 தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, நாளை நான்காவது டெஸ்டில் விளையாடவுள்ளது. அதன்படி இப்போட்டி முடிந்த பிறகு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இருப்பினும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளதால், யார் யார் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை