இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?

Updated: Mon, Jul 08 2024 21:41 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. 

அந்த பாராட்டு விழாவின் போது உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பரிசுத்தொகையில் இருந்து யாருக்கு எவ்வளவு பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற தகவல் தற்சமயம் வெளியாகியுள்ளந்து. அதன்படி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 கோடி பரிசாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த 15 வீரர்களுக்கு தலா 5 கோடி வழங்கப்படும். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ஃபீல்டிங் பயிற்சியாளர் திலிப் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே ஆகியோருக்கு இந்த பரிசுத்தொகையில் இருந்து ரூ.2.5 கோடி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர்த்து தேர்வுகுழுவைச் சேர்ந்த அஜித் அகார்கர், சலில் அன்கோலா, ஷிவ் சுந்தர் தா, சரத் மற்றும் பானர்ஜி உள்ளிட்டோருக்கு ரூ.ஒரு கோடியும், அணி மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் அணியுடன் பயணித்த மற்ற பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 கோடியும் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை