முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Updated: Wed, Feb 05 2025 21:55 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. இந்த தொடருக்கான தயாரிப்பைப் பொறுத்தவரை, இந்த முத்தரப்புத் தொடர் மூன்று அணிகளுக்கும் முக்கியமானது. அந்தவகையில் இந்த முத்தரப்பு தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன்படி இத்தொடரில் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளது.  இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் நிலையில் இறுதிப்போட்டி பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகள் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்திலும், மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான இந்த அணியில் 6 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மீகா-ஈல் பிரின்ஸ், கிடியோன் பீட்டர்ஸ், ஈதன் போஷ், மிஹாலி மபோங்வானா, மேத்யூ பிரீட்ஸ்கி மற்றும் செனுரன் முத்துசாமி ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் இந்த ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் காயத்தில் இருந்து மீண்ட ஜெராட்ல் கோட்ஸி இடம்பிடித்திருந்தார். ஆனால் இந்த அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் பயிற்சியின் போது மீண்டும் காயத்தை சந்தித்தன் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் அவர் சேர்க்கப்பட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே ஆன்ரிச் நோர்ட்ஜே காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்போது ஜெரால்ட் கோட்ஸியும் காயத்தை சந்தித்திருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், ரஸ்ஸி வேண்டர் டுசென், காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் எஸ்ஏ20 லீக் தொடரில் விளையாடி வருவதன் காரணமாக இப்போட்டிக்கான அணியில் இடம்பிடிக்கவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

முதல் ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஈதன் போஷ், மாத்தியூ பிரீட்ஸ்கி, ஜூனியர் தாலா, வியான் முல்டர், மிஹாலி மபோங்வானா, செனுரான் முத்துசாமி, கிடியோன் பீட்டர்ஸ், மீகா-ஈல் பிரின்ஸ், ஜேசன் ஸ்மித், கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை