டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு வீரர்கள் சேர்ப்பு!

Updated: Thu, May 23 2024 21:10 IST
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு வீரர்கள் சேர்ப்பு! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அப்படி முன்னேறும் நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்கள் ரோலோஃப் வான்டெர் மெர்வ் மற்றும் காலின் அக்கர்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இளம் அதிரடி வீரர் மைக்கேல் லெவிட்டிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்கிடைத்துள்ளார். அதேசமயம் மேக்ஸ் ஓடவுட், ஆர்யன் தத், லோகன் வான் பீக், பால் வான் மீகெரன், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பரேஸி, ஃபிரெட் கிளாசென், பாஸ் டி லீட் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஃபிரெட் கிளாசென் மற்றும் டேனியல் டோரம் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக கைல் கெலின் மற்றும் சாகிப் சுல்ஃபிகர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஆர்யன் தத், பாஸ் டி லீட், கைல் கெலின், லோகன் வான் பீக், மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பால் வான் மீகெரென், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமானுரு, ⁠⁠டிம் பிரிங்கிள், விக்ரம்சித் சிங், விவ் கிங்மா, வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்ஃபிகர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை