Advertisement
Advertisement
Advertisement

netherlands cricket team

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட்!
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட்!

By Bharathi Kannan June 17, 2024 • 20:12 PM View: 66

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா ஆகியோர் தலா 46 ரன்களைச் சேர்த்தனர். 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையிலும், அடுத்து வந்த வீரர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத காரணத்தால் 16.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Cricket News on netherlands cricket team

Advertisement
Advertisement