பயிற்சியின் போது இங்கிலாந்து கேப்டன் காயம்; முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!

Updated: Tue, Jun 01 2021 22:01 IST
Image Source: Google

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 2) லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்தார். 

உடனடியாக களத்தில் இருந்து வெளியேறிய ஜோ ரூட் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதில் அவரது கை பகுதியில் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

இதனால் நாளைய போட்டியில் ஜோ ரூட் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அணி ஜோ ரூட்டை நம்பியே உள்ளது. ஒருவேளை அவர் நாளைய போட்டியில் பங்கேற்காத பட்சத்தில் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் இழப்பாக அமையும். 

அதேசமயம் அவர் இப்போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது இடத்தை சாம் பில்லிங்ஸ் அல்லது ஹசீப் ஹமீத் ஆகியோர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::