ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை பந்தாடி வெற்றியை பெற்றது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் அபார சதத்தால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 124 ரன்களை குவித்தார்.
அதன்பின் இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் மனீஷ் பாண்டே 31 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன்னும் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் வந்தவர்கள் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றியை பதிவுசெய்தது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில் பந்துவீசிய மோரிஸ், முஸ்தபிசூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.