ஐபிஎல் 2021: தனிமைப்படுத்துதலில் சிஎஸ்கே; ராஜஸ்தான் அணியுடனான போட்டி ஒத்திவைப்பு!
இந்தியாவில் கரோனா வைரஸின் 2ஆம் அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஆறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வாநாத், பந்துவீச்சு பயிற்ச்சியளார் லக்ஷ்மிபதி பாலாஜி, பேருந்து பராமரிப்பாளர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நளை நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிஎஸ்கே அணி நிர்வாகிகள், ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, ஐபிஎல் நெறிமுறைகளின் படி மொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை நடைபெற இருந்த சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.