அதிரடி ஆல்ரவுண்டருக்கு காயம்; மும்பை இண்டியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!

Updated: Mon, Apr 12 2021 20:46 IST
Image Source: Google

ஐபிஎல் தொடர் வரலாற்றியில் அதிகமுறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 13 சீசன்களில் விளையாடி 5 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் மும்பை அணி இந்த சீசனை எதிர்கொண்டுவருகிறது. ஆனால் ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் தோல்வியைத் தழுவியது.

இதற்கிடையில் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது காயம் தீவிரமடையும் பட்சத்தில் அவரால் ஒருசில போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜாகிர் கான், "ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கெதிரான அனைத்து டி20 போட்டிகளிலும் பந்துவீசினார். இருப்பினும் அவரது தோள்பட்டை காயம் காரணமாக முதலாவது போட்டியில் அவரால் பந்துவீச முடியவில்லை. எனவே தான் நாங்கள் ஆவரது காயம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.

அவர் கூடிய விரைவில் காயத்திலிருந்து மீண்டு, பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை எங்கள் அணியில் உள்ள மற்ற பந்துவீச்சாளர்கள் அணியின் சுமையைக் குறைப்பர்" என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை