ஐபிஎல் 2021: டிரான்ஸ்பர் விண்டோவை புறக்கணிக்கிறதா சிஎஸ்கே??
ஐபிஎல் தொடருக்கான 14ஆவது சீசனுக்கான டிரான்ஸ்பர் விண்டோ தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பர் விண்டோ முறை மூலம் பிற அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை பாதி தொடரில் மற்ற அணிகள் தேர்வு செய்ய முடியும்.
ஒரு அணியில் 3 போட்டிக்கும் குறைவாக ஆடி இருக்கும் வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும். வெளிநாட்டு வீரர்கள்தான் பொதுவாக இப்படி டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள்.
எந்த வருடமும் இல்லாமல், இந்த வருடம் அதிக அளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த வருடம் பெரிய அளவில் வீரர்கள் அணி மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இந்த வருடம் அதிக அளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
கரோனா காரணமாக இதுவரை 5 க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளியேறி உள்ளனர். முக்கியமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் தொடரை புறக்கணித்து உள்ளனர். ஆனால் இந்த வருடம் பல அணிகள் டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தி புதிய வீரர்களை தங்கள் அணியில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே எந்த வீரர்களையும் டிரான்ஸ்பர் மூலம் எடுக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே முதலில் ஒரு வீரரை டிரான்ஸ்பர் செய்யும் திட்டத்தில் இருந்துள்ளது. ஆனால் தோனி இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
யாரையும் புதிதாக எடுக்க வேண்டாம், யாரையும் வெளியேவும் அனுப்ப வேண்டாம். இதே அணி இருக்கும் என்று தோனி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே மொத்தமாக டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தாமல் புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.