ஐபிஎல் 2021: டி காக் அரைசதம்; கேகேஆர்-க்கு 156 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 34ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி மும்பை அணியின் தொடாக்க வீரர்களாக ரோஹித் சர்மா - குயின்டன் டி காக் இணை களமிறங்கியது.
ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணை எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி அலறவிட்டது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்வும் 5 ரன்களில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அரைசதம் அடித்து, 55 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் மும்பை அணி சற்று தடுமாறியது.
இறுதியில் அதிரடியாக விளையாடிவந்த பொல்லார்டும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லோக்கி ஃபர்குசன், பிரசீத் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்