ஐபிஎல் 2021: ராஜஸ்தான் பந்துவீச்சில் தடுமாறிய கேகேஆர்!

Updated: Sat, Apr 24 2021 21:21 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவுசெய்தது.

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுப்மன் கில், நிதீஷ் ராணா இணை தொடக்கம் கொடுத்தது. ஆனால் இப்போட்டியிலும் சுப்மன் கில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படித்திய நிதீஷ் ராணாவும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராகுல் திரிபாதியும் 36 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய மோர்கன், சுனில் நரைன், அண்ட்ரே ரஸ்ஸல் என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலினுக்கு திரும்பினர். பின்னர் தினேஷ் கார்த்திக்கும் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை