வருணை புகழ்ந்த விராட் கோலி!
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி போட்டிகள் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
இதில், பெங்களூரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.
இந்த நிலையில், தோல்வி அடைந்தாலும் விராட் கோலி திருப்தி அடைந்த ஒரே விஷயம், வருண் சக்கரவர்த்தியின் அபார பவுலிங்கை நினைத்து தான். இதனை, ஓப்பனாகவே நேற்று போட்டி முடிந்த பிறகு பேசிவிட்டார் கோலி.
வருண் குறித்து பேசிய அவர் "வருணின் ஆட்டம் அருமையாக இருந்தது. ஓய்வரையில் உட்கார்ந்து நான் சொல்லிக் கொண்டிருந்தது இதுதான், "இந்தியாவுக்காக விளையாடும்போது அவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார்" என்றேன். இந்திய கிரிக்கெட்டின் பெஞ்ச் வலிமை வலுவாக இருக்க அனைத்து இளைஞர்களிடமிருந்தும் இதுபோன்ற அபார திறமையை நாம் பார்க்க வேண்டும்.
மேலும், அவர் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார், அவரது இந்த செயல்பாடு அதற்கு ஒரு பெரிய அறிகுறியாகும்" என்றார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
கேப்டன் விராட் கோலியே, இவ்வளவு வெளிப்படையாக டி20 உலகக் கோப்பைத் தொடரின் இந்திய அணியில், வருண் சக்கரவர்த்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கப் போகிறார் என்பதை இப்போதே தெளிவுப்படுத்திவிட்டார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரின், அனைத்து போட்டிகளிலும் ஸ்பின்னராக அணியில் இடம்பெறப் போவது உறுதி என்று தெரிகிறது.