ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா
- இடம் : வான்கேடே மைதானம், மும்பை.
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி இரண்டு தொடர் வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது. மேலும் இன்றைய போட்டியில் கொல்கத்தாவை வென்றால் ஹாட்ரிக் வெற்றிப் பெற்று சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை, முதல் ஆட்டத்தில் மட்டும் வென்ற நிலையில், தற்போது 3ஆவது தோல்வியை தடுக்கும் திட்டத்துடன் சென்னை அணியை எதிா்கொள்கிறது. கடந்த இரு ஆட்டங்களிலும் முதலில் கொல்கத்தாவின் கை ஓங்கி இருந்தாலும், பின்னர் ஆட்டம் அந்த அணியின் கையை விட்டுச் சென்றது .
சிஎஸ்கேவை பொறுத்தவரை அணியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றே தோன்றுகிறது. தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றே தோன்றுகிறது. அதேபோல பவுலிங்கிலும் எவ்வித மாற்றத்தையும் சிஎஸ்கே மேற்கொள்ளாது என்றே தெரிகிறது.
கொல்கத்தாவை பொறுத்தவரை சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், மார்கன்ஆகியோர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். மேலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆல் ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். பவுலிங்கை பொறுத்தவரை பாட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை பெரிதும் நம்பியிருக்கிறது. இவையெல்லாம் கைகொடுத்தால் இன்று கொல்கத்தாவுக்கு வெற்றி வசமாகும்.
நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா 22 ஆட்டங்களில் நேருக்கு நேராக விளையாடி உள்ளன. அதில் சென்னை அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தேச அணி
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட்/ ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸ், எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, சாம் கரன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.
கேகேஆர்: நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன்/ சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
- பேட்ஸ்மேன்கள் - நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுரேஷ் ரெய்னா, டு பிளெஸிஸ்
- ஆல்ரவுண்டர்கள்- மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரவீந்திர ஜடேஜா
- பவுலர்கள் - பாட் கம்மின்ஸ், தீபக் சஹார், டுவைன் பிராவோ