ஐபிஎல் 2021: சதமடித்த கெய்க்வாட்டை புகழ்ந்த பிரையன் லாரா!

Updated: Mon, Oct 04 2021 12:51 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் தற்போதைய ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சில வீரர்கள் தங்களது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தனர். 

அந்த வகையில் நேற்று முந்தினம் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இளம் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் 189 ரன்கள் அடித்த சென்னை அணி தோற்று இருந்தாலும் கெய்க்வாட்டின் இந்த ஆட்டம் பெரிதளவு கவனத்தை ஈர்த்தது. இந்த போட்டியின் முதல் ஓவரிலிருந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக தொடக்கத்தில் அரைசதத்தை 43 பந்துகளில் கடந்த அவர் அதன்பிறகு மிடில் ஓவர்களில் தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் அவரது இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் லாரா இதுகுறித்து கூறுகையில், “ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். பெரிய பெரிய ஷாட்களை அவர் விளையாடும் போது அவருடைய ஷேப்பை மாற்றாமல் சிறப்பாக எதிர்கொண்டார்.

அவர் அடித்த அனைத்து ஷாட்களும் க்ளீனாக இருந்தன. முதலில் 29 பந்துகளில் 30 ரன்கள் வரை மட்டுமே அடித்த அவர் அதன்பிறகு பந்துவீச்சாளர்களை தாக்க ஆரம்பித்தார். நிச்சயம் அவர் விளையாடிய இந்த இன்னிங்ஸ் அற்புதமான ஒன்று. அவரது இந்த ஆட்டம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நிச்சயம் இவரால் நல்ல கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாட முடிகிறது. அதன் மூலமே அவர் பெரிய ரன்களை குவிக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். நிச்சயம் அவர் கே.எல் ராகுல் போன்று அதே கேட்டகரியில் வருவார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை