விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திரும்பிய ஹஸ்ஸி, பாலாஜி!

Updated: Fri, May 07 2021 12:54 IST
Image Source: Google

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்டது. வீரர்களுக்கு பல அடுக்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என பாதுகாப்பான முறையில் தொடர் நடத்தப்பட்டது.

ஆனால் பயோ பபுளில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சன்ரைசர்ஸ் வீரர் விருதிமான் சாஹா, டெல்லி வீரர் அமித் மிஸ்ரா, சிஎஸ்கே பயிற்சியாளர்கள், மைக் ஹஸ்ஸி, பாலாஜி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே பயிற்சியாளர்கள் மைக் ஹஸ்ஸி, எல்.பாலாஜி ஆகியோர் டெல்லியில் இருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் அலுவலர் ஒருவர் கூறுகையில் “ மைக் ஹஸ்ஸி, பாலாஜி இருவரையும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வர முடிவு செய்துள்ளோம். இங்கு சிறந்த மருத்துவமனைகளுடன் தொடர்பு இருப்பதால், இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இருவருக்கும் அறிகுறி இல்லாத கரோனா என்பதால், நலமாக உள்ளனர். மைக் ஹஸ்ஸி கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வரும்வரை இந்தியாவில் இருக்க வேண்டும். அதன்பின் தனி விமானத்தில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை