ஐபிஎல் 2021: துபாய் கிளம்பியது சிஎஸ்கே; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Updated: Fri, Aug 13 2021 13:39 IST
Image Source: Google

கரோனா தொற்றால் பாதியியேலே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. 

இதில் முதல் போட்டியிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றது.

இதையடுத்து மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்பே அறிவித்ததைப் போல இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுள்ளதுள்ளது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் புகைப்படங்கள் தாற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::