ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்ட்ஸி லெவன் தகவல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகின்றன.
போட்டி தகவல்
- மோதும் அணிகள் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம் : வான்கேடே மைதானம், மும்பை
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில போட்டிகளாக படுதோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதிலும் நேற்றைய போட்டியின் போது 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.
அதேசமயம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், லிவிங்ஸ்டோன் என அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் தொடரிலிருந்து விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவைத் தந்துள்ளது, மேலும் அணியின் பந்துவீச்சு வரிசையிலும் தொடர்ந்து சருக்கல்களை சந்தித்துவரும் ராஜஸ்தான் அணி, அதிலிருந்து மீண்டு வெற்றியை பெறுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று தான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்பு சீசனில் சரியான ஃபர்பாமன்ஸை வெளிப்படுத்த தவறிவருகிறது என்று தான் கூறவேண்டும். ஏனெனில் அதிரடியான பேட்டிங்கை கொண்டுள்ள கொல்கத்தா அணி எளிய இலக்குகளை கூட துரத்த முடியாமல் தடுமாறி வருகிறது.
ஆனால் சென்னை அணியுடனான கடைசி போட்டியின் மூலம் ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், பாட் கம்மின்ஸ் ஆகியோர் மீண்டும் தங்களது ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு சாதகமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இனிவரும் போட்டிகளிலும் அவர்களது அதிரடி ஆட்டம் தொடருமேயானால் எதிரணிக்கு அது நிச்சயம் ஆபத்தான ஒன்று தான்.
நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 12 முறையையும், ராஜஸ்தான் அணி 10 முறையையும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச அணி
ஆர்.ஆர்: ஜோஸ் பட்லர், மனன் வோரா/ யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான்,ஸ்ரேயாஸ் கோபால்/ கார்த்திக் தியாகி, சேட்டன் சக்கரியா.
கேகேஆர்: நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.
பிளிட்ஸ்பூல் பேண்ட்ஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள்: சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக்
- பேட்ஸ்மேன்கள்: நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, டேவிட் மில்லர்
- ஆல்ரவுண்டர்கள் : ஆண்ட்ரே ரஸ்ஸல், ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ்
- பவுலர்கள்: பாட் கம்மின்ஸ், சேட்டன் சக்கரியா, முஸ்தபிசூர் ரஹ்மான்.