ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 48ஆவது லீக் ஆடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
பின் விராட் கோலி 25 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 40 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் ரன் ஏதுமின்றியும் ஹென்றிக்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் - ஏபிடி வில்லியர்ஸ் இணை எதிரணி பந்துவீச்சை சரமாறியாக சிக்சர்களை விளாசி அசத்தியது. இதில் மேக்ஸ்வெல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆனால் 18 ஆவது ஓவரில் சிக்சர்களை விளாசியா டி வில்லியர்ஸ் 23 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இருப்பினும் மேக்ஸ்வெல் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் கடைசி ஓவரை வீசிய முகமது சமி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 60 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹென்றிக்ஸ், முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.