ஐபிஎல் 2021: ஆர்சிபி பந்துவீச்சில் 141 ரன்களில் சுருண்டது ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கியது. இதில் அபிஷேக் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருவரும் அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில்லியம்சன் 31 ரன்னிலும், ஜேசன் ராய் 44 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஹைதராபாத் அணி தடுமாறியது.
இறுதியில் ஜேசன் ஹோல்டர் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆர்சிபி அணி தரப்பில் டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.