டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனையைப் படைத்த ரோஹித் சர்மா!

Updated: Wed, Oct 06 2021 13:22 IST
IPL 2021: Rohit Sharma Becomes First Indian Batsman To Smash 400 Sixes In T20 Cricket (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 90 ரன்களை மட்டுமே குவித்தது. 

அதனை தொடர்ந்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 8.2 ஓவர்களில் 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்னர் வரை ரோகித்சர்மா சர்வதேச டி20 போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகள் என இரண்டிலும் சேர்த்து 398 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித் அடித்த 2 சிக்சர்கள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சரை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை ரோகித் சர்மா 212 போட்டிகளில் விளையாடிய 227 சிக்சர்களை அடித்து உள்ளார்.

இந்த பட்டியலில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக அடித்த வீரராக கெயில் 357 சிக்சர்களுடன் முதலாவது இடத்திலும், டிவில்லியர்ஸ் 249 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், ரோகித் சர்மா 227 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் உலகளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 1042 சிக்சர்களுடன் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பொல்லார்டு 758 சிக்ஸர்கள், ரஸ்ஸல் 510 சிக்ஸர்கள் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்திய அணியை பொறுத்தவரை முதல் நபராக ரோகித் தற்போது 400 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 336 சிக்ஸர்களும், கேப்டன் கோலி 316 சிக்ஸர்களும், தோனி 304 சிக்சர்களும் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை